கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா: கோவையில் தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

கோவை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.



தி.மு.க., தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, கோவை 55-வது வட்டம் சார்பில் பழையூரில் வட்ட செயலாளர் மா.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

இதேபோல், மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



காளப்பட்டியில் மாநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில் நடைபெற்ற விழாவில் 95 பேர் கண் தானம் வழங்கினர். 

இதேபோல், ராம்நகரில் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் கணேஷ்குமார் தலைமையில் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.



கோவை, தெலுங்குபாளையம் பிரிவில், மாநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தெலுங்குபாளையம் ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், கழக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. 

காந்திபுரம் அண்ணாசிலை அருகே, மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி 10 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். 

காரமடையில் புறநகர் வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார் கழக கொடியேற்றி வைத்து, 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...