வால்பாறையில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா தேயிலை தோட்டத்தில் கடந்த வாரம் சிறுத்தைப்புலி தாக்கியதில் 11 வயது மாணவி மற்றும் சந்திரமதி என்ற தொழிலாளி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி நேற்று சின்கோனா தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அதே குடியிருப்புக்கு அருகில் ஒரு மாட்டை சிறுத்தை கொன்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, இன்று சின்கோனா முதல் பிரிவு, பெரியகல்லார் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது. வால்பாறை காவல் ஆய்வாளர் திருமேனி. மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையிலான குழுவினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...