ஸ்டெர்லைட் மூடல்: கோவையில் மோட்டார் நிறுவனங்களில் காப்பர் தட்டுப்பாடு ஏற்படுமா?

கோவை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, கோவையின் பிரதான தொழிலான மோட்டார் உற்பத்தி நிறுவனங்களில் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு வல்லுனர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

கோவை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, கோவையின் பிரதான தொழிலான மோட்டார் உற்பத்தி நிறுவனங்களில் காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு வல்லுனர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தென்னிந்திய இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "ஸ்டெர்லைட் மூலம் கிடைக்கும் காப்பர் கிட்டத்தட்ட 30 சதவீதம் பயன்பட்டு வருகிறது. இந்த ஆலை மூடப்பட்டது நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

பம்ப் உற்பத்தித் துறையில், மோட்டார்கள் தயாரிக்க காப்பர் பயன்படுத்தி வருகிறோம். தற்போது ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பரின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

கோவையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் காப்பர்களை இறக்குமதி செய்கின்றன. அதில் சில நிறுவனங்கள் ஸ்டெர்லை மூலம் கிடைக்கும் காப்பரை பயன்படுத்தி வந்தன. தூத்துக்குடியில் அமைந்திருந்த அந்த நிறுவனத்தில் இருந்து கடந்த 2016-17-ம் ஆண்டில் மட்டும் 402,000 டன் வரையிலான காப்பர் உற்பத்தி செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையால் கோவையில் தொழிற்சாலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கோவை பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார்களில் காப்பர் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது, அதில் 50 சதவீதம் அலுமினியம் பயன்பாடு உள்ளது. மீத தேவைக்கு காப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து உள்நாட்டு பயன்பாட்டுக்கு வெறும் 15 சதவீத காப்பரே உபயோகத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால், காப்பர் தேவைக்கும், இந்த தொழிலுக்கும் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறோம்." என்றார்.

பெரும் நிறுவனங்கள் தங்களுக்கு காப்பர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், சிறிய நிறுவனங்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறுகின்றன. அடுத்த சில தினங்களுக்கு சந்தை நிலவரங்களை முறையாக கண்காணித்து வரும் போதே உண்மையான நிலவரம் என்ன? என்பதை அறியமுடியும்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...