கள்ள நோட்டு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆனைகட்டியில் கைது

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை: பிரபல கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சுந்தரம் மற்றும் கிதர் முகம்மது-வை பிடிப்பதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிதர் முகம்மது-வை ஆனைகட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கோவை, வேலாண்டிபாளையம் மருதக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், சாய்பாபா காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில், அவரிடம் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அந்த நோட்டுகள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்திடம் நடத்திய விசாரணையில் தனது நண்பர் சுந்தர் என்பவர் மூலம், வேலாண்டிபாளையத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒன்றரை மாதமாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான, 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாதிகளுடன் தொடர்பா?

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ள சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு சுந்தர் தான் தலைவர் என்றும், அவருக்கு கிதர் முகமது பக்கபலமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் மூவருக்கும், சிறையில் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கிதர் முகமது மேல் ஏற்கெனவே பல்வேறு கள்ள நோட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கு, சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், எனவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை, தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கைது

இந்நிலையில், கிதர் முகம்மது-வை ஆனைக்கட்டி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சுந்தரைத் தேடி தனிப்படை போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...