அப்பா 'வாட்ச்-மேன்' மகள் 'டாக்டர்': கோவை மாநகராட்சி பள்ளி மாணவி 'நீட்' வெற்றி

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

கோவை: மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.

சொக்கபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி. சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியினரின் மகள் அழகுலட்சுமி. ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்த இவர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 1120 மதிப்பெண்கள் பெற்றார்.



கனவு

அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவு. இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வினை எழுதினர். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் அவருக்கு எம்.பி.பி.எஸ்., கிடைக்கவில்லை. மாறாக பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) தான் கிடைத்தது. ஆனால், அழகுலட்சுமிக்கு எம்.பி.பி.எஸ்., மட்டுமே ஒரே லட்சியமாக இருந்தது. இதனால், அவர் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வுக்கு தயாரானார்.

அதன்படி, தேர்வை எழுதினார். இதில் அவருக்கு 316 மதிப்பெண்கள் கிடைத்தது. தற்போது பெற்றுள்ள மதிப்பெண் மூலம் அவருக்கு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

வாழ்வில் சாதிக்க ஏழ்மை ஒரு தடையில்லை என்பதையும், ஒடுக்குமுறைகளை ஒடுக்கி யாவராலும் மேலே எழ முடியும் என்பதையும் இந்த தேர்வின் மூலம் அழகுலட்சுமி நிரூபித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...