ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதலமைச்சர்

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதாவது:- 

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு ஒன்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை (தட்டு, குவளை, தாள்கள்) தடை செய்யவும், வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுக்கள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது. 

மேலும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்றவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பல்வேறு தீங்குகளை தரக்கூடிய பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்பட வேண்டும். எனவே, அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக அரசின் இந்த உத்தரவு பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...