கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி கொலை : வார்டன்கள் சஸ்பெண்ட்

கோவை: கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை.



கோவை: மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இரண்டு வார்டன்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கோவை மத்திய சிறையில் நேற்று கைதிகள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைதி விஜய் என்பவர் ரமேஷை கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் நடந்த கொலை தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கைதியின் கொலை தொடர்பாக பணியின் போது அலட்சியமாக இருந்ததாக சிறை தலைமை வார்டன் முனுசாமி மற்றும் வார்டன் கருப்பசாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விசாரணை 

இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் வேலுசாமி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு நடத்தினர். அதில் இறந்து போன கைதியின் உடலில் உள்ள மச்சங்கள், காயங்கள், தழும்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 



மேலும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருங்கல்லையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மத்திய சிறையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...