மழை நீர் சேமிப்பு குறித்து சிற்பம் தயாரித்த யு.எம்.டி.ராஜா

கோவை: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.

கோவை: குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.

பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் காளைகளை வடிவமைத்திருந்தார்.

சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர்., நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் மற்றும் கருணாநிதி உருவம், மேலும், மூன்று பென்சில்களின் முனையில் தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப் போல் சிற்பம் போன்றவற்றை வடிவமைத்திருந்தார்.

தற்போது மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரை கிலோ தேன் மெழுகு கொண்டு விநாயகர் சிலையை வடிவமைத்து விநாயகர் மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது போல வடிவமைத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "பொதுமக்களிடையே மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், மரம் நடவேண்டியதின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அதை வடிவமைத்தேன். இதை செய்ய ஒரு நாள் ஆனது. இதனை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உள்ளேன். மரம் நடுவோம் மழை பெறுவோம் என்பதே இதனை உருவாக்கியதின் நோக்கம்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...