கோவையில் வாசனை திரவிய தொழிற்சாலை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே அமைய உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு தடை விதிக்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சி, கரியன்குட்டை என்னுமிடத்தில் வாசனை திரவியம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ஹெக்சேன், அசிட்டோன், ஆல்கஹால், மெத்தனால், காஸ்மிக் அமிலம், போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதால் இப்பகுதி சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, இத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் ஆணை நீர் ஆலையின் ரசாயன கழிவுநீரால் மாசடையும் என்ற புகார் எழுந்துள்ளது.

மேலும் தொழிற்சாலையை சுற்றியுள்ள நஞ்சனூர், வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், கண்டியூர் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாழாகி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறும் இப்பகுதி விவசாயிகள் இத்தொழிற்சாலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இயற்கை சூழலும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் என்கின்றனர். 

பாதிப்புக்களைத் தடுக்க இந்த ரசாயன தொழிற்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையினை முன்வைத்து இன்று இரு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாத காரணத்தினால் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...