ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு ஏழு ஆண்டு சிறை

திருப்பூர்: காங்கயத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர்: காங்கயத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.750 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் செங்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பாலசுப்பிரமணியம் (55). விவசாயி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தனது தந்தையின் பெயரில் இருந்த விவசாய மின் இணைப்புகள் மற்றும் கோழிப் பண்ணைக்கான மின் இணைப்பை தனது பெயரில் மாற்றம் செய்துதரக் கோரி காங்கயத்தில் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

மனுவைப் பெற்ற மின்வாரிய அலுவலர் செல்வராஜ் (65) ரூ.3000-ம் லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ரூ.1500 தரும்படி செல்வராஜ் கேட்டுள்ளார். அதற்கும் மறுக்கவே இறுதியில் 3 மின் இணைப்புகளுக்கும் ரூ. 750 தரும்படி கேட்டுள்ளார் செல்வராஜ். இதையடுத்து பாலசுப்பிரமணியம் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் மார்ச் 9-ம் தேதி செல்வராஜ், பாலசுப்பிரமணியத்திடம் இருந்து லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வராஜை மின்வாரியம் பணியிடை நீக்கம் செய்தது. இந்த வழக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் செல்வராஜூக்கு ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு 7-ன் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரிவு 13(2) ன்படி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2000 அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பளித்தார். இதையடுத்து, செல்வராஜ் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...