தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: கோவையில் தமிழிசை பேட்டி

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும் எனக் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், காவல்துறை கவனமாக செயல்பட வேண்டும் எனக் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால், மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது. 

தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு, கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் நடந்து வருகிறது. 

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது. நீட் தேர்வை பொருத்தவரை அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 4,000 மருத்துவ சீட்டுகள் தான் உள்ளது. இதில், சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பது தான் முக்கியம். பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.

குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும். சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசுதான் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தொடர்ச்சியாகப் பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர்கதையாக உள்ளது. கவலை அளிக்கிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும், என்றார். 

இதனிடையே, பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி. சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என்ற கேள்வியை செய்தியாளர்கள் தமிழிசை சவுந்தரராஜனிடம் எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. எஸ்.வி., சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்," என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...