கோவை, நீலகிரி மாவட்டங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: கோவை குற்றாலத்தில் நுழைய பொதுமக்களுக்குத் தடை

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி உள்ள மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். இதனால், மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று முதல் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும், சாலையோரமாக இருக்கும் மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன. மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும், கோவை குற்றாலத்திற்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அங்கு செல்லவிருக்கும் சாலைகளில் மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. பலத்த காற்றுக்கு எப்போது வேண்டுமானாலும், மரங்கள் விழும் என்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு போளுவாம்பட்டி வனச்சரக அலுவலரின் பரிந்துரையின்பேரில், கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.



இதேபோல, வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், கடந்த ஒருவார காலமாக அவ்வப்போது தூரல் மழையுடன் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுகுன்றா சாலையில் ராட்சத மரங்கள் விழுந்ததில், பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இஞ்சிப்பாறை, முடீஸ், வெள்ளமலை சாலையில் மரம் விழுந்து ஊசிமலை, வெள்ளமலை பகுதியில் போக்குவரத்து போக்குவரத்து முடங்கியுள்ளது.



அக்காமலை சாலையில் பச்சமலை தேயிலை தோட்டம் அருகே ராட்சத மரம் வேரோடு சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் இப்பகுதியில் உள்ள பச்சமலை கருமலை வெள்ளமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால், பல்வேறு இடங்களில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் வாரிய ஊழியர்களும் மின் விநியோகத்தை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கன மழை காரணமாக டோபி காலணியில் நடராஜன் என்பவரின் விட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிசேதமும் ஏற்படவில்லை.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவ மழை தற்போது உரிய நேரத்தில் தொடங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் உதகை, நடுவட்டம், கூடலூர், எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ள காரணத்தால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.



இதனிடையே, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவு இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மரங்கள் இருக்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. பள்ளி குழந்தைகளை மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கும் இடத்தில் செல்ல விடக்கூடாது. மண்சரிவு ஏற்பட்டால் உடனே தகவல் அளிக்க வேண்டும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...