வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்.

கோவையை அடுத்த வால்பாறையில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான பணிகொடை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், "தேயிலை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 309 என வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 116 பேருக்கு ரூ. 54,36,261 பணிக்கொடை வழங்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

தொழிலாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. அவர்களது தேவைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்," என்றார். பின்னர் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைக்கான காசோலையை தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...