திருப்பூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் அதிக மின்னழுத்தம் காரணமாக 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு கீதா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மரத்தை வெட்டும் போது மரக்கிளை தாழ்வாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியுள்ளது. 



இதில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் சில வெடித்தும், சில இயங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென செயலிழந்தும் போனது. 



அதேபோல் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்த இயந்திரத்திலும் அதிக மின்சாரம் பாய்ந்து தீ பற்றியுள்ளது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 



மேலும், அப்பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதே விபத்திற்கு காரணம் எனவும் அதை மின் வாரியம் சரி செய்வதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...