திருப்பூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் அரசு மருத்துவமனை ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அருணாச்சலம் (65). இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவியும், சித்ராதேவி என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அருணாச்சலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் தகராறு செய்வது வழக்கம். பிரச்சனையின் போதெல்லாம், அக்கம்பக்கத்தினர், தலையிட்டு குடும்பத்தினரை சமாதானம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அருணாச்சலம், குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை வீட்டிலிருந்த மகன் முருகேசன் கண்டித்துள்ளார். அப்போது, தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அருணாச்சலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இச்சம்பவம், குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே குடிபோதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த தந்தையைப் பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...