ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: ஆட்டோ வாடகையை உயர்த்த வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் யூனியன் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சோசியல் டெமாக்ரடிக் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

எங்கள் தொழிற்சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கிலோ மீட்டருக்கு ரூ.12 அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அப்போது, பெட்ரோல் விலை ரூ.48- ஆகவும், டீசல் விலை ரூ.37- ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை அதிகபட்சமாக உயர்ந்துவிட்டது. எனவே, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35-ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.18-ஆகவும் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலில், அரசு கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நியாயமான கோரிக்கையை அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...