2018-19-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.


நடப்பு ஆண்டில் பிளஸ்1, பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வுக்கான தேதிகளை பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, மேல்நிலைக் கல்வியான பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான மொழி 2-ம் தாளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், கல்வியாண்டின் துவக்கத்திலேயே பிளஸ்2, பிளஸ்1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிளஸ்2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.04.19 அன்று வெளியிடப்படும். பிளஸ்1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 08.05.19 அன்று வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.19 முதல் 29.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும். 

மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும், என்றார். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...