கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யக் கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை : கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கவுண்டம்பாளையம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கவுண்டம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள டிரைவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அருகிலுள்ள துடியலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். இத்தனை புகார்கள் கொடுத்தும், தொடர்ந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், சட்டவிரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கஞ்சா வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென, கவுண்டம்பாளையம் - இடையார்பாளையம் சாலையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...