நொய்யலில் பெருகும் வெள்ளம்: 'சாயக்கழிவு கலப்பதை தடுத்திடுங்கள்'

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர்  நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக  நதியில் தற்போது வெள்ளம் பெருகி வருகிறது. வறண்டே கிடந்த  அன்னை, வற்றாத காட்டாற்று வெள்ளம் போல் பாய்வதைக் கண்ட திருப்பூர் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அதே நேரத்தில், சாயக்கழிவு ஆலை உரிமையாளர்களும் 'குஷி'யில் உள்ளனர். காரணம், இது போன்ற நேரத்தில் தான், சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை, இரவு நேரங்களில்  நதியில் கலந்து விடுவர். 

கடந்த முறை இதே போன்று சாயக்கழிவுகளை  நதியில் கலந்த காரணத்தால், நுரையுடன் சென்ற ஆற்று நீர் யாருக்கும் பயன்படாமல் போனது. 

எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து, நொய்யலில் சாயக்கழிவுகள் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...