தமிழ்நாடு முன்னேறக்கூடாது என்பதற்காக இயக்கம் ஒன்று செயல்படுகிறது : திருப்பூரில் மத்திய அமைச்சர் பேச்சு

கோவை: தமிழ்நாட்டில் எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது என்று திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

கோவை: தமிழ்நாட்டில் எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது என்று திருப்பூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். 

இந்திய அரசு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் விழா திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 

இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் கிருஷ்ண பால் குர்ஜார் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



பின்னர், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திலும், மோடி அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. 

சிறு குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் இலவசமாக வழங்கப்படுகிறது. 7 வகையான மாற்றுத்திறனாளிகள் தற்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எவ்வித தொழில் முன்னேற்றமும் வந்துவிடக்கூடாது என்பதில் பெரிய இயக்கம் ஒன்று செயல்படுகிறது. 

ஒரு இயக்கம் பல வடிவங்களில் செயல்படுகிறது. அது ஏற்றுமதி முதல் அனைத்து விஷயங்களிலும் பாதிக்கிறது. அதேபோல் எந்தவொரு புதிய விஷயத்தை கொண்டுவரும் போது தற்காலிகமாக பின்னிடவைச் சந்திக்கும். புதிய தொழிற்சாலைகள் வரக்கூடாது என நாம் நினைத்தால் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் தமிழகத்தில் முதல் நிலையில் இருப்போம்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...