கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையினால், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையினால், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

தென் மாவட்ட பாசன வசதிக்க கர்நாடகா அணையில் இருந்து நீர் திறந்து விடுமாறு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், மாநிலத்தில் குடிநீர் தேவைக்கான நீரே இல்லை, எனவே நீர் திறந்துவிட முடியாது என கர்நாடகாவின் அப்போதைய முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனிடையே, தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அதிருப்தியடைந்த கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் அமைத்த ஆணையத்தின் தங்களது தரப்பு உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க தயக்கம் காட்டி வருகிறது. 

இதனிடையே, பாசனத்திற்கு தேவையான நீர் திறக்கப்படாததால், தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெய்த மழையினால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதேபோல, கர்நாடகாவிலும் மழை வெளுத்து வாங்குகிறது. 

இந்த நிலையில், கர்நாடகா நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்பட்ட போது தண்ணீரை திறந்துவிடாத கர்நாடகா, அணைகள் நிரம்புவதால், அதனைத் தேக்கி வைக்க முடியாத சூழலில் தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. அணைகள் நிரம்பி தானாக ஓடும் நீரை, தமிழகத்திற்கு திறந்துவிட்டதாகக் கணக்கு காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை விசமத்தனம் வாய்ந்ததாக உள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...