பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் போட்டோவுக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் நான்கு சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது, சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்தப் பள்ளம் பெரிதாகி விட்டது. இதனால், அடிக்கடி அந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பி.என்.ரோட்டில் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் வந்தவர், அந்தப் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால், அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நடுரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர். பின்னர், அவர்கள் அந்தப் பள்ளத்தில் கேள்விக்குறி அடையாளத்துடன் கூடிய போட்டோவுக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக சரி செய்யப்படுவதாகக் கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...