தொடர் மழையினால் கோவையில் அணைகள் நிரம்பியும் குடிநீர் தட்டுப்பாடு : நீர் விநியோக நாட்களை நீட்டிக்கக் கோரிக்கை

கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கோவை : கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர், ஆழியார் ஆகிய அணைகள் நிரம்பியுள்ள நிலையில், குடிநீர் விநியோகிக்கப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே 28-ம் தேதி முதல், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணை 38/50அடியாக உள்ளது. பில்லூர் அணை 97/100 அடியாக உள்ளது. ஆழியார் அணை 60/120 அடியாக உள்ளது.



மழைப்பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டங்கள் உயர்ந்தும், நகரில் 5 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.

"நகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாக்கடையோடு கலந்து வீணாகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நகரில் நல்ல மழைப் பொழிவு இருந்தும், 12 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைக் காலத்தை போலவே இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம்," என்று புகாரளிக்கிறார் பீளமேட்டைச் சேர்ந்த லட்சுமன்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாநகராட்சி பகுதிகளில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைப் பொழிவு காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. தற்போது வரை குடிநீர் விநியோகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரும் நாட்களில் அணைகளின் நீர்மட்டத்தைப் பொருத்து குடிநீர் விநியோக நாட்கள் அதிகரிக்கப்படும்," என்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...