இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, கோவை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் ஓட்டுநர், வாகன ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி செந்தில்ராமை கவனிக்கவில்லை. கார் ஆய்வாளர் அருகே கார் சென்ற போது, திடீரென சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பதற்றத்தில், காரை வேகமாக திருப்பினார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது.



இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெக்கலூரைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்திற்குக் காரணமான மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்ராம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...