பசுமை வழி சாலைக்கு எதிரான கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் கைது

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக அமைக்கப்பட இருக்கும் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகானை போலீசால் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் - சென்னை இடைப்பட்ட தூரத்தில் எட்டு வழி சாலை (பசுமை வழி சாலை) அமைப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிரான கருத்துக்கள் எழுந்த போதிலும், சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக முதல்வர் கடந்த வாரம் சட்டப்பேரவையில் அறிவித்தார். 

பாதிப்பு

இந்த சாலை அமைக்கப்படும் போது பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து, சாலைக்கான அறிவிப்பு வெளியான நாள் முதலே மக்கள் போராடி வருகிறார்கள். இதற்கு தமிழ் நடிகர்கள் சிலரும் குரல் கொடுத்திருந்தனர்.

அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைக்க எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார். இதனால் பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுகிறது. அரசு யாருக்கோ உதவி செய்ய இப்படி திட்டமிடுகிறது என்ற கருத்துக்களை முன் வைத்தார்.

இந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் வைத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர். சென்னை வந்த சேலம் போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சர்வாதிகாரம்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவ்வபோது பேசிவரும் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா மீதும், பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீதும் நடவடிக்கை எடுக்காத இந்த அரசு, மக்களுக்கு ஆதரவாக கருத்து கூறியதற்காக மன்சூர் அலிகானை கைது செய்திருப்பது சர்வாதிகாரப் போக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...