இந்து முன்ன​ணியை கண்டித்து திருப்பூரில் 20-ம் தேதி பொதுக்கூட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்ன​ணியினரின் செயலைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 20-ஆம்​ தேதி பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் அனைத்துக் கட்சி ​நிர்வாகிகள் ​கூட்டம், மார்க்சிஸ்ட்​ கம்யூனிஸ்ட்​ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.​ இக்கூட்டத்தில், திருப்பூரில் இந்து முன்னணியினர், வீர சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மாநக​ர்​​முழுவதும் ​சாலைகளை மறித்தும், போக்குவரத்தை நிறுத்தியும் அவசரமாக செல்லும் வாகன ஓட்டிகளை மிரட்டியும் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்பட்டது.



மேலும், கோல்டன் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., கொடிக்கம்பத்தை இரவோடு இரவாக அகற்றி விட்டு இந்து முன்னணியின் கொடிக்கம்பத்தை நட்டு கொடியேற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சூழலில், இந்து முன்னணியினரின் போக்கை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் கோல்டன் நகர் பகுதியில் வரும் 20-​ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மா​னம் நிறைவேற்றப்பட்டது.



இந்த கூட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சி, ​​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, ம.தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழக​ம் உள்​ளி​​ட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...