உதகை பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.



நீலகிரி: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீட்டை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியும், போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 9 பேருக்கு ரூ. 40 லட்சம் காப்பீடு மூலம் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.






பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முதலமைச்சர் நிவாரண நிதி மட்டுமின்றி, போக்குவரத்துக் கழகம் சார்பில் காப்பீடு மூலம் உடனே காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் முறை முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதி தவிர, போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நபருக்கு ரூ. 2.50 லட்சமும், 7 நபருக்கு தலா ரூ. 5 லட்சமும் என ரூ. 40 லட்சம் 9 பேருக்கு காப்பீடு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தரமில்லாத பேருந்துகள் இல்லை. போக்குவரத்து துறையின் நடவடிக்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கு ரூ. 65 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டுள்ளது," என்றார். இதைத்தொடர்ந்து, பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உதகை பேருந்து கவிழ்ந்த விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட 18 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Video: Syed Abbas

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...