கபடி, ஹாக்கிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கிரிக்கெட்டை தவிர்த்து கபடி, ஹாக்கிக்கும் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : கிரிக்கெட்டை தவிர்த்து கபடி, ஹாக்கிக்கும் முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கும் மத்திய. மாநில அரசுகளை கண்டித்து 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளை விளையாடினர். 



"தற்போது ரசியாவில் உலகக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆசிய அளவில் தகுதி பெற முடியாததால் பங்கு பெறவில்லை. ஆனால், மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட உலகக் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற போது, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பங்கு பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. 

மத்திய, மாநில அரசுகள் கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து விட்டனர். மக்கள் விளையாடும் கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தாமல், உலகளவில் ஏழு நாடுகள் மட்டும் விளையாடும் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்துவது அவமானம் மிகுந்த செயலாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் கபடி, ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு நீதி ஒதுக்கி வீரர்களுக்கு முறையான பயிற்சியளித்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," இவ்வாறு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...