பவானி ஆற்றை பாதுகாக்கும் வகையில் ரூ. 91 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை : பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், ரூ. 91 கோடி செலவிலான பாதாள சாக்கடை திட்டத்தை மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உற்பத்தியாகும் பவானியாறு கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்திற்குள் நுழைகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு என 3 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானி நதி மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவு நீர் கலப்பால் கடுமையாக மாசடைந்து வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் கரையோர ஊராட்சிகளின் கழிவுகள் எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடையாக பவானியாற்றில் கலக்க விடப்படுவதாலும், இங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக்கழிவுகள் சட்ட விரோதமாக திறந்து விடப்படுவதாலும் இந்த ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்த இயலாத சூழல் நிலவி வருகிறது. 

நகராட்சி கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் தேவை என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்கென தமிழக அரசால் ரூ. 91 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இத்திட்டப்பணியின் துவக்க விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு திட்டப்பணியினை தொடங்கி வைத்தார். 

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ரூ. 40 கோடி செலவில் கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் பல்லாண்டு கோரிக்கையான அத்திக்கடவு – அவினாசி நிலத்தடி மேம்படுத்தும் திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளபடி விரைவில் துவக்கப்பட்டு குறித்த காலத்தில் முடிக்கப்படும். இத்திட்டத்தில் விடுபட்டிருந்த பல பகுதிகள் புதிய திட்ட வரைவில் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...