பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய விவகாரம்: நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி., சேகர்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் பா.ஜ.க., பிரமுகர் எஸ்.வி., சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக, தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். எனவே அவரைக் கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெறுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், எஸ்.வி. சேகர் ஆஜராகாமல், உல்லாசமாக சுற்றித் திரிந்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கைதாவதிலிருந்து அவரைக் காப்பாற்றினர். அதனால், எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி, பலத்த பாதுகாப்புக்கிடையே எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...