இயற்கை வளங்களை காக்க போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள், நக்சல்கள் என்பதா..? பியூஷ் மனுஷ் சகோதரி கேள்வி

கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார். 

கோவை பிரஸ் கிளப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷின் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், சகோதரி ஊர்வசி லுனியா பேசியதாவது :- நேற்று முன்தினம் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ்மனுஷை கடத்தி சென்றது போல போலீசார் அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. பியூஸ் மனுஷ் செல்போனை போலீசார் வைத்துள்ளனர். செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மாட்டேன் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஸ் சொல்கிறார். அவர் மக்களைத் தூண்டிவிடவில்லை. தண்ணீர், நிலம், சுத்தமான காற்றுக்காகவும், விவசாயிகளுக்கும் போராடினால், குரல் கொடுத்தால் மாவோயிஸ்ட், நக்சல் என அரசு சொல்லுமா..?. 8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. இதைக் கேள்வி எழுப்பினால் பியூஸ் மனுஷ் கைது செய்யப்படுகின்றார். பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முயலுகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பது மட்டும் போலீசாரின் பணியா..?

மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பது, அறியாமையைப் போக்குவது போன்றவை போராட்டத்தை தூண்டும் செயலா..? பியூஸ் மனுஷ் கைது சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல. தமிழகம் தழுவிய அளவில் அனைத்துச் சுற்றுச்சுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...