பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறையான தகவல் இல்லை: திருப்பூரில் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்களுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில், திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர். 

நீண்ட நேரமாகியும் கலந்தாய்வு தொடங்காததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பொது மாறுதல் கலந்தாய்விற்கும், நாளை நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கும் காலி பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டன. 

இதனால் நீண்ட தூரத்தில் குழந்தைகளுடன் வந்து காத்திருந்த ஆசிரியர்கள் இதுகுறித்து முன்கூட்டியே முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...