தமிழ்வழிச் சான்றிதழ் பெறுவதில் குழப்பம்: சிறப்பாசிரியர்களுக்கு சிக்கல்.!

கோவை: ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வின் போது, கொண்டுவர வேண்டிய தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் ஏராளமான சிறப்பாசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.


கோவை: ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவின் கலந்தாய்வின் போது, கொண்டுவர வேண்டிய தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் ஏராளமான சிறப்பாசிரியர்கள் திண்டாடி வருகின்றனர். 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவிற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 35,781 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதனிடையே, பணியிடங்களுக்கான கலந்தாய்வின் போது, தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்கும் போது தமிழ்வழிச் சான்றிதழ் பெற்று வரவேண்டும். போட்டித்தேர்வுக்கு முன்கூட்டியே 18.08.2017 அன்றே தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ், படித்த கல்லூரி முதல்வர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக சிறப்பாசிரியர்களுக்கு கல்லூரி படிப்பு கிடையாது. அதற்குப் பதிலாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறையின் சார்பில் 3 மாத தொழிற்படிப்புகள் பயிற்சி வகுப்புகள் வைத்து, தேர்வு நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் தான் அவர்கள் பணி நிரந்தரத்திற்கான போட்டி தேர்வை எதிர்கொள்வார்கள்.

ஆனால், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை மூலம் நடத்தி வந்த அரசு தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி தமிழில் தான் நடந்தது. அதேநிலையில், கவின் கலை ஓவிய தொழிற்படிப்புகள் ஆங்கிலத்தில்தான் இருந்தது. இதனால், தமிழ்வழிச் சான்றிதழை எவ்வாறு பெறுவது என தெரியாமல் சிறப்பாசிரியர்கள் தவித்து வந்தனர். இது குறித்து போட்டி தேர்வு நடைபெற்ற போதே, தமிழ்வழிச் சான்றிதழ் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேட்ட போது, முறையான பதில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது போட்டித் தேர்வு முடிகள் வெளியாகியுள்ளது. எந்த நேரமும் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படலாம். ஆனால், 90 சதவீத ஆசிரியர்கள் தமிழ்வழிச் சான்றிதழ் இல்லாமல் அதற்கான காலமும் முடிந்ததால் கலந்தாய்வில் அவர்கள் கலந்துகொள்ள முடியுமா என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் மாநில தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "தொழில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் யாரிடம் தமிழ்வழிச் சான்று பெறுவது என இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளிக்கவில்லை. அதேபோல, தையல் ஆசிரியர் பயிற்சி அரசு தனியாகவும், தனியார் நிறுவனம் தனியாகவும் பயிற்சி நடத்தி உள்ளது. தையல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் இச்சான்றிதழ் பெற திண்டாடி வருகின்றனர்.

இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தமிழ்வழிச் சான்றிதழ் குறித்து தெளிவான பதில் அளிக்க வேண்டும். ஓவிய ஆசிரியர் பயிற்சி, கவின் கலை பட்டப்படிப்பு இவை இரண்டும் இல்லாதவர்களைச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும். 

அதேபோல, அரசாணையில் ஒருபணி இடத்திற்கு 5 பேர் என்ற முறையில் (1:5) என அழைக்கப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் ஓவிய பகுதிநேர ஆசிரியர்கள் மட்டும் 5,008 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களும் சிறப்பாசிரியர்கள் போட்டித்தேர்வை எழுதியுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த ஓவிய ஆசிரியர்கள் பணி இடம் 327 மற்றும் உடற்கல்விக்கு 663 இடங்களும், தையல் பயிற்சிக்கு 249 இடங்களும், இசைக்கு 86 இடங்களும் என மொத்தம் 1,325 பணி இடங்கள் மட்டுமே நிரப்ப உள்ளது. ஆனால், இத்தகைய போட்டித் தேர்வு எழுதியவர்கள் 35,781 பேர் ஆகும்," என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...