மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்: உலக யோகா தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ஒரே இடத்தில் இரண்டாயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

மனித குலத்திற்கு பெரும் பிரச்சனையாக கருதப்படுவது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவையே. இவை எதுவும் தொற்று நோய்கள் அல்ல, உடற்பயிற்சி இன்மை, தலைகீழான உணவு பழக்கம், உறக்கமின்மை போன்ற காரணங்களே இவற்றுக்கு அடிப்படை காரணங்களாக உள்ளது.



இதற்கு மிக சிறந்த தீர்வாக கூறப்படுவது யோகாசனம். உடற்பயிற்சி உடலை மட்டுமே வலுவாக்கும் மனதை செம்மையாக்காது என்ற நிலையில் உடலும், மனமும் ஒரு சேர வளம் பெற யோகாசனம் மட்டுமே தீர்வாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த யோகாசனத்தை மேலும் பரவலாக்கும் விதமாக இன்று சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரண்டாயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மலையடிவாரத்தில் இயற்கை எழில் மிகுந்த கல்லார் பகுதியில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் இரண்டு மணி நேரம் யோகாசனத்தில் உள்ள சூர்ய நமஸ்காரம் துவங்கி, புஜங்காசனம், மத்தியாசனம், சர்வாங்காசனம், யோக முத்ரா, நாடி சுத்தி என பல்வேறு ஆசனங்களை முறைப்படி செய்து காட்டினர்.



பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியோடு, யோகாவையும் ஒரு அங்கமாக வைத்துக் கொண்டால் வளரும் இளைய தலைமுறையிரை சிறந்த குடிமகன்களாக உருவாக்க இயலும் எனக்கூறும் இதன் ஆசிரியர்கள், நோயற்ற உலகை உருவாக்க யோகா பெரிதும் உதவும் என்கின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...