வெள்ளப்பெருக்கு அபாயத்திலும் கோவை குற்றாலம் திறப்பு: தவறான முடிவை எடுத்ததா வனத்துறை?

கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவை குற்றாலம் திறக்கப்பட்டது தவறான முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை குற்றாலம் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், அங்கு செல்லும் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்து சாலை துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கோவை குற்றாலம் கடந்த 9-ம் தேதி முதல் மூடப்பட்டது. பதினோரு நாட்களுக்குப் பிறகு நேற்று குற்றாலம் திறக்கப்பட்டது.

மழை காரணமாக வெள்ளம் ஓயாத போதிலும், குற்றாலம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிக்க செல்லும் பொது மக்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதே போல், கடந்த 2015-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கின் போது குற்றாலம் திறக்கப்பட்டதால் அங்கு குளிக்க சென்ற 27 வயது பெண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். எனவே, நீர்வரத்து குறையும் வரையில் குற்றாலத்தை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...