நீலகிரி நெடுஞ்சாலையில் லாரிகளில் இருந்து சிந்தும் நீர்: தொடரும் விபத்துக்கள்

நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.


நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் தனியார் லாரிகள் தண்ணீர் நிரப்புவதால் அந்த பகுதியில் சாலையில் எப்போதும் ஈரமாகவும், தண்ணீர் ஓடிக்கொண்டும் உள்ளது. மேலும், அப்பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணி நடைபெறுகின்றது. இதனால், அங்கு களிமண் குவியல் நிறைந்து காணப்படுகிறது.



இதனால், அந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இன்று காலை கார் ஒன்று இந்த பகுதியை கடக்கும் போது சாலையில் மண்ணுடன் ஈரம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி கவிழும் நிலையில் தொங்கியது.



வாகனத்தில் இருந்தவர்கள் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த பிரச்சனையில், நெடுஞ்சாலை துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...