வேளாண்மை பல்கலை., தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என் ஆர்த்தி, 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். கொடுமுடி பகுதியை சார்ந்த ஸ்ரீ கார்திகா பழனிச்சாமி 199.67 கட் ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். கோவையை சார்ந்த எம். மோகனா 199.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.



இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கே.ராமசாமி கூறுகையில், "வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இணையதளம் மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெறுவதால் கோவைக்கு யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை.

முதல் முறையாக இணையதள வழியாக வரும் ஜூலை 9 முதல் 13-ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. அதே மாதம் 23-ம் முதல் 27 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

தொழில் கல்விக்கான கலந்தாய்வு 16-ல் நடைபெறும். அதே போல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்டு மாதம் முதல் நாள் கல்லூரி தொடங்குகிறது. அதே மாதம் 31-ம் தேதியோடு மாணவர் சேர்க்கை முடிவடையும்.

இணையதள வழியாக நடைபெறும் கலந்தாய்வில் சிலைடிங் (Sliding) முறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனால் மாணவர்கள் கலந்தாய்வில் இடங்கள் இருந்தால் தங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தரவரிசை பட்டியலில் 197 என்ற கட் ஆப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றுள்ளனர். 195.75 கட் ஆப் 200 பேர் பெற்றுள்ளனர். 195 கட் ஆப் 300 பேர் பெற்றுள்ளனர். கலந்தாய்வின் படி மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலேயே இடம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க வேண்டாம்." என்றார்.

48,676 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 32,621 பேர் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆண்கள் 13,889 , பெண்கள் 18,732 என்பது குறிப்பிடத்தக்கது.







Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...