தூர்வாரும் பணி: ஊட்டி படகு இல்ல ஏரியில் நீர் வெளியேற்றம்

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: ஊட்டி படகு இல்ல ஏரியை தூர்வாருவதற்காக, ஐந்து அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, ஏரியின் நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.



ஊட்டி நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கோடப்பமந்து கால்வாய் வழியாக, ஊட்டி ஏரியின் கரையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, சுத்திகரிக்கப்பட்ட பின், ஊட்டி படகு இல்ல ஏரிக்குள் தண்ணீர் விடப்படுகிறது.

மழைக் காலங்களில் வெள்ளம் அதிகரிக்கும் போது, கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் நேரடியாக விடுகின்றனர். இதனால் தற்போது, ஏரி முழுவதும் சகதி அதிகரித்து, சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரியை தூர்வார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஊட்டி நகராட்சி பொதுப்பணித் துறை அதிகாரிகள் இணைந்து, ஏரியை தூர்வார முடிவு செய்தனர். பருவமழையால் தூர்வாரும் பணிகளை தொடங்க முடியவில்லை. தற்போது, ஓரளவு மழை குறைந்துள்ளதால் ஏரியை தூர்வாரும் முற்கட்ட பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளனர்.



இதற்காக, ஏரியில் ஐந்து அடிவரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரியில் எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவி கூறுகையில், ''ஏரிக் கரையோரம் காய்ந்த பின், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து, தூர்வாரும் பணியை தொடங்க உள்ளோம்." என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...