பயணிகளிடையே வரவேற்பை பெற்றது கோவை-பெங்களூர் 'உதய்' எக்ஸ்பிரஸ்

கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கோவை: கோவை-பெங்களூர் இடையே புதிதாக தொடங்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



கடந்த 8-ம் தேதி இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, கோவையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் செல்லும் போது, வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 70 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர். இதே போல், பெங்களூரில் இருந்து கோவைக்கு செல்லும் போது வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 90 சதவீத பயணிகளும் பயணிக்கின்றனர். 



இந்த ரயிலில் மூன்று குழுக்களிலும் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் நான்கு பெண்கள் உள்ளனர். இந்த ரயிலில் உள்ள எட்டு பெட்டிகளில் மூன்று பெட்டிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதரான டபுள் டெக்கர் பேட்டியில் 120 இருக்கைகளும், டைனிங் வசதியுள்ள பெட்டிகளில் 104 இருக்கைகளும் உள்ளன. திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயங்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...