அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் : மத்திய அரசு

அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல் அந்தந்த மாவட்டங்களிலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இனி வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை எற்படாது. மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வுக்கு கேள்விகள் இடம்பெறும். 

தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும். திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லடசம் வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்படும். தமிழகத்தில் கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக துவங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...