பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் கனரக வாகனங்கள் : குறுகிய சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்

கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


கோவை : மேட்டுப்பாளையம் நடூர் நகராட்சியில் போடப்பட்டுள்ள குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பகுதியில் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் மேட்டுப்பாளையத்தை கடந்துதான், உதகைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். இதனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நடூர் வழியாக செல்லுமாறு போக்குவரத்தில் போலீசார் தற்காலிகமாக மாற்றம் செய்தனர். தற்காலிகமாக செய்யப்பட்ட இந்த ஏற்பாடு, பின்னர் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது.

நகராட்சியின் மிக குறுகிய சாலையாக இருக்கும் இந்த சாலையில்தான் நகராட்சி அரசுப்பள்ளி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலை நேரத்தில் இந்த சாலைகள் மார்க்கத்தில், அதிவேகமாக வரும் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் அப்பகுதி மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். கனரக வாகனமான பேருந்தோ அல்லது லாரிகளோ ஒன்று வந்தால் கூட, அதனை நடந்து செல்பவர்களே விலகி செல்ல முடியாத அளவுக்கு சாலை குறுகிய நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், அந்த சாலை மார்க்கமாக வரும் வாகன ஓட்டிகளும் இதனைக் கடந்து செல்வதை பெரும் சவாலாக எதிர்கொண்டு வருகின்றனர். 



குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அன்னூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த நகராட்சி சாலைகளில்தான் இயக்கப்படுகின்றன. இதனால், சாலை ஓரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகமும் தடைபெறுகிறது. 

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகராட்சிக்கு ஆணையாளர் என தனியாக அரசு நியமிக்காத காரணத்தால், கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்வதில்லை. மேலும், புகார் பெறும் அதிகாரிகள் தான் மாறி மாறி செல்கின்றனர். தங்கள் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பிரச்சனையில். மாவட்ட நிர்வாகம் தலையிட்டாவது, உரிய தீர்வு கண்டு கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக வருவதைத் தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...