தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உதகையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 



இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கக் கோரி உதகையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். இந்தத் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்பப் பெற வேண்டும். 

உதகையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த விபத்து குறித்து உரிய விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும். மூடப்பட்டுள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையை மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது பல்நோக்கு மருத்துவமனையாகவோ அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...