ஜீன்பூல் தாவர மையத்தில் சூழல் சுற்றுலாத் தொடக்கம்

நீலகிரி : கூடலூர் அருகே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இன்று முதல் சூழல் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி : கூடலூர் அருகே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீன்பூல் தாவர மையத்தில் இன்று முதல் சூழல் தொடங்கப்பட்டுள்ளது. 

கூடலூர் அருகேயுள்ள நாடுகாணி பகுதியில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜீன்பூல் தாவரமையம் உள்ளது. இந்த மையத்தில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை செடிகள், பல்வேறு காலநிலைகளில் வளரும் தாவரங்கள் என பலவற்றை பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதற்குள் அமைந்துள்ள காட்சிப் பகுதியில் இருந்து கேரளா பள்ளத்தாக்கு உள்ளிட்ட இயற்கை அழகை ரசிக்க முடியும். ஆனால், ஜீன்பூல் தாவர மையத்திற்குள் செல்ல இதுநாள் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், இன்று முதல் ஜீன்பூல் தாவர மையத்தில் சூழல் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பழங்குடியினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்தத் திட்டம் இன்று தொடங்கப் பட்டுள்ளது. ஜீன்பூல் தாவர மையத்தில் காட்டு யானை உள்ளிட்ட விலங்கு நடமாட்டம் இருப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கையை ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜீன்பூல் தாவர மையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதோடு, தாவரங்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...