எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தாலும் மத்திய அரசைப் பாராட்டாத தமிழக அரசியல் கட்சிகள்: கோவையில் தமிழிசை வருத்தம்

கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.



கோவை: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தாலும், இங்குள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குப் பாராட்டை தெரிவிக்க மறுப்பதாக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மத்திய அரசு எதற்கெல்லாம் விமர்சிக்கப்பட்டதோ. அதெல்லாம் சரி செய்யப்பட்டது. பன்னெடுங்காலமாக புறக்கணிப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வந்தாலும், சில கட்சிகள் மத்திய அரசுக்கு பாராட்டை தெரிவிக்க மறுக்கின்றனர். 

காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு போவோம் எனச் சொல்லும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர். காவிரி விவகாரத்தில் கமல்ஹாசன் உட்பட எந்தக் கட்சியும் குமாராசாமிக்கு எதிர்ப்பைக் காட்டவில்லை. மேலும், மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காகக் கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் இருக்கின்றார். கர்நாடக முதலமைச்சர் குமாராசாமி தமிழகத்திற்கு எதிராக பேசும் நிலையில், அவருக்கு எதிராக தமிழக கட்சிகள் போராடவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் காட்டிய கருப்புக்கொடி, கருப்பு பலூன் போன்றவற்றைத் திரும்ப பெற வேண்டும். ஸ்டாலின் பெங்களூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும். 

குட்கா விவகாரத்தில் எந்தக் கட்சி தவறு செய்து இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விவகாரம் 10-15 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். குட்கா வழக்கில் சி.பி.ஐ., விசாரணை முழுமையாக நடத்தப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்களை ராஜினாமா செய்ய சொல்வது என்பது சரியாக இருக்காது. குட்கா விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான குற்றச்சாட்டுகள், காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. பா.ஜ.க., மீது எந்த புகாரும் இல்லாததால் காங்கிரஸ் கட்சி அமித்ஷா மீது தவறான தகவல்களை பரப்புகின்றது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...