பிரேசில் - கோஸ்டாரிக் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியைத் தொடங்கி வைத்த இந்தியச் சிறுமி யார் தெரியுமா..?

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார்.

பிரேசில் - கோஸ்டாரிகா அணிக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த இந்திய சிறுமி என்ற பெருமையை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-வயது சிறுமி பெற்றுள்ளார். 

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஒவ்வொரு போட்டிகளிலும் பயன்படுத்தப்படும் பந்துகளை, சிறுமியின் கைகளால் எடுத்து வரப்பட்டு, போட்டிகளை ஆரம்பிக்கப்படும். இதற்காக, உலகம் முழுவதும் சிறுமிகளுக்கென ஓ.எம்.பி.சி. எனப்படும் அதிகாரப்பூர்வ போட்டியின் பந்தை எடுத்து வருபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 

இதில், இந்தியா சார்பில், 1,600 சிறுமிகள் தேர்வாகினர். அதில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கே. நதினா ஜான் மற்றும் ரிஷி தேஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்தியா சார்பில் 2 பேர் உலகக் கோப்பைப் போட்டியை தொடங்கி வைக்கச் செல்வது முதல்முறையாகும். உலக அளவில் 64 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பிரேசில், கோஸ்டாரிகா அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான பந்தை கோத்தகிரி சிறுமி நதினா ஜான் எடுத்து வந்து, போட்டியைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை தொடங்கி வைத்த முதல் தமிழக சிறுமி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 2-க்கு-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...