கோவையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த ஆறு பேர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூரில் ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் மற்றும் கேமராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த கொள்ளையர்களை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: சிங்காநல்லூரில் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் காமிராவை பயன்படுத்தி பொதுமக்கள் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த ஆறு பேரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கோவையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர் தங்களது வங்கி ஏ.டி.எம்.,களில் ஸ்கிம்மர் மற்றும் காமிரா பொருத்தி வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

கண்காணிப்பு காமிரா காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது, இந்த கொள்ளையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வசிம் மற்றும் தமிழரசன், திருச்சியைச் சேர்ந்த கிஷோக், இலங்கையைச் சேர்ந்த லவசாந்தன், திருப்பூரைச் சேர்ந்த மனோகரன், சென்னையைச் சேர்ந்த நிரஞ்சன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இவர்கள் ஆறு பேரையும் கிருஷ்ணகிரி மாவட்டம் டோல் பிளாசா அருகே உள்ள தனியார் ஓட்டல் அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கோவையில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் ஸ்கிம்மர் மற்றும் காமிரா பொருத்தி, அதன் மூலம் பல வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, போலியான ஏ.டி.எம்., கார்டுகளை உருவாக்கி பல இடங்களில் சுமார் ரூ.19 லட்சம் வரை பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு லேப்டாப், 17 செல்போன்கள், 20 ஏ.டி.எம் கார்டுகள், 40 கிராம் தங்க நகைகள் மற்றும் இரண்டு சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற பல்வேறு இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. 



தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...