பெண் ஐ.டி ஊழியர்கள் திடீர் மயக்கம் : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை: தனியாருக்கு சொந்தமான ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஐ.டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பணிக்கு செல்லும் முன் இரவு பணியாளர்கள் புரோட்டா சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள் புரோட்டா சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், நேற்று ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் ஜீரணம் எளிதில் ஆகாத புரோட்டாவை உண்டதால் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று காலை முதலே பெண் ஊழியர்கள் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து வருகின்றனர். 

இப்படி திடீரென மயக்கமடைந்து வரும் பெண் ஊழியர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் ஆறு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...