டவர் லைன் அமைக்கும் பணியில் கம்பம் உடைந்து மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளி பலி

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பி அறுந்து 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.


கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர் கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்து வரும் இவர் கடந்த சனிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் திட்டகோட்டி அருகே 110 கே.வி புதிய டவர் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டிஸ்க் (disk) என சொல்லக்கூடிய உதிரி பாகத்தை ஏற்றும் போது கம்பம் உடைந்து (சேனல்) 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சார உதிரி பாகங்கள் தரமற்றதாக இருந்த காரணத்தினால் தான் கம்பம் உடைந்து கீழே விழுந்தாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தில் கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "தரமற்ற உதிரி பாகங்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான அதிகாரியை தண்டிக்க வேண்டும். இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். அதே போல் அரசு தரப்பில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்." என்றார்.

பெரியசாமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நிதி திரட்டப்பட்டு அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...