மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் மக்கள் பீதி

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப் பகுதியினை ஓட்டி அமைந்துள்ள குரும்பனூர், தாசம்பாளையம், வெல்ஸ்புரம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு மலை அடிவார விவசாய நிலத்திற்கு வரும் யானைகள் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தி வருவதுடன், ஊருக்குள் நுழைந்து சாலைகளிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாசம்பாளையம் பகுதியில் உள்ள முத்து என்பவரது தோட்டத்தினுள் நுழைந்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த சோளப் பயிர்களை சேதப்படுத்தியது. 

தொடர்ந்து, தாசம்பாளையம் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சாலையில் நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். 

இருப்பினும் காலை 4 மணி வரை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளையே சுற்றி வந்த யானையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறை உதவியுடன் நெல்லிமலைக்கு விரட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் ஊடுருவல் காரணமாக இரவில் மக்கள் வெளியே நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...