தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வாழ்க்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்க செய்யப்பட்டுள்ளது.


டெல்லி: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரி தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தக்க செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது. 

இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெளியிட்டது. அவர்கள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை கூறினர். இதனால், இந்த வழக்கில் 3-ஆவது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நீதி கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...